வாகனங்களின் போலிப் பதிவேடு விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கோபா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.








