Wednesday, July 22, 2026
No menu items!

பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டம் ரத்து செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்தல் வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் பரிசீலித்து ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை தனது அனுமதியை வழங்கியுள்ளது. அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ஒழிக்கும் இந்த மசோதாவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. இதனை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. முன்னதாக,...

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை!

பாராளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாதுகாப்பு சோதனை நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உள்ளிட்ட முழு பாராளுமன்ற கட்டிடமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். நவம்பர்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்..!!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ்...

பாராளுமன்ற அமர்வுகள் ஒக்டோபர் 21 முதல் 24 வரை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்றம் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அமர்வுகள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.00...

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு!

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  (08)...

இம்மாதம் பாராளுமன்றம் கூடவுள்ள தினங்கள் குறித்த அறிவிப்பு!..!

பாராளுமன்றம்  எதிர்வரும் மே மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். அதற்கமைய, மே மாதம்...

வாகனங்களின் போலிப் பதிவேடு குறித்து விசாரிக்க புதிய குழு நியமனம்!

வாகனங்களின் போலிப் பதிவேடு விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். கோபா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர்...

பாராளுமன்றத்திற்கு சென்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்..!

இலங்கை பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொதுமக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக கடந்த புதன்கிழமை (9) தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். அன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வை பல்கலைக்கழக குழுவினர், பொதுமக்கள் களரியில் அமர்ந்து ...

சபையில் அர்ச்சுனா எம்.பி உரையாற்ற கட்டுப்பாடு..!

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி உரையாற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேச்சுக்கு நேரடி ஒளிபரப்பு இல்லை, பேசியதையும் தகவலாக திரட்டி எழுதவோ பதிவிடவோ முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபையில்..!

தடுப்புக் காவலில் உள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை ஏப்ரல் 8 ஆம் திகதி குழுவின் முன் வைப்பதற்குப் பதிலாக, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img