சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான உர மானியம் தாமதமாகி வருவதால், விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக உர மானியத்தை விரைவில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சிறுபோகத்திற்கான நெற்செய்கையினை ஆரம்பித்துள்ளனர்.

அறுவடை செய்வதற்கு சுமார் 10 முதல் 15 நாட்கள் ஆகும் எனவும், இந்த காலகட்டத்தில் யூரியா உரத்தினை இடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here