மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (4/20/2025) காலையில் இடம்பெற்றுள்ளது.

இன்று உயிர்த ஞாயிறு தினத்தையிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றது இதனையடுத்து தேவாலயங்களில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடந்த 2019 ஏப்ரலில் 21 உயிர்த்த  ஞாயிறு  தினத்தில் சியோன் தேவாலயங்களில் ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் ஸரரான் காசிம் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here