ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார், அங்கு அவர் புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஜனாதிபதி வருகை தந்ததும், இலங்கைக்கான வத்திக்கானின் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் என். உதய்க்வே அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
பேராயர் உதய்க்வே உடனான ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்க இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.







