நாட்டில் கொழும்பு 07, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய  சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் இலங்கை காற்றின் தரச் சுட்டெண்  மிதமான அளவிலும், கொழும்பு 07, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண்  40 மற்றும் 84 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையிலும், கொழும்பு 07, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை  ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 1.00 மணி முதல்  2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here