இலங்கை இன்று (மே 22) தனது 53வது குடியரசு தினத்தை நினைவு கூருகிறது.1972 ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்திலிருந்து நீக்கி, முழுமையான சுதந்திரக் குடியரசாக பிரகடனம் செய்தது.

இதற்குமுன், 1815ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டு, அதன் ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டது.

1972ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் மூலம், சோல்பரி யாப்பு முறையில் இருந்து வெளியேறி, இலங்கை தன்னாட்சி பெற்றது.

இந்நாள், நாடு முழுவதும் தேசிய உற்சாகத்துடன் நினைவுகூரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here