வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமுலுக்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

  • பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும்.
  • 40 வயதுக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு விசேட வைத்திய பரிசோதனைகள் அறிமுகமாகும்.
  • மதுபோதையில் வாகனம் செலுத்துவதை தடுக்கும் வகையில், விசேட சோதனை உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.
  • வீதி சமிக்ஞை விளக்குகளில் நேரமானி பொருத்தப்படும்.
  • செப்டெம்பர் மாதத்துக்கு பின்னர், அதிவேக நெடுஞ்சாலையில் பின்புற ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசன பட்டி கட்டாயமாகும்.
  • எதிர்வரும் 12 மாதங்களில், இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரம் அறிமுகமாகும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விபத்துகள் குறையும் நோக்கிலும், கட்டுப்பாடான போக்குவரத்தை உருவாக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here