Lungisani Ngidi of Royal Challengers Bengaluru celebrates the wicket of Sam Curran of Chennai Super Kings during match 52 of the Indian Premier League season 18 (IPL 2025) between Royal Challengers Bangalore and Chennai Super Kings held at the M.Chinnaswamy Stadium, Bengaluru on the 3rd May 2025. Photo by Prathiksha MK / Sportzpics for IPL

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 65 வது போட்டி ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம்  மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஒவ் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இருந்தபோதிலும் தன்னுடைய புள்ளிபட்டிலில் முதலிடத்தை நோக்கி நகர்வதற்காக  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ம் இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்காக ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முழுமையான முயற்சியை எடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிரடிகாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்துவது என்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு போராட்டமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here