இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகையின் அடுத்த தவணையை ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக் குழு எதிர்வரும் வாரங்களில் கூடவுள்ளது.
IMF பேச்சாளர் ஜுலி கொசாக், வொசிங்டனில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற பணிக்குழாம் மட்ட இணக்கப்பாட்டின் போது, கிரய மீட்பு, மின்கட்டண சீராக்கல், மற்றும் சுயமாக இயங்கும் மின்கட்டண முறைமை போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கடன் ஒப்புதல் பெறப்பட்டால், இலங்கை உடனடியாக 344 மில்லியன் அமெரிக்க டொலர் பெறும் என IMF தெரிவித்துள்ளது.








