அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹவார்ட் பல்கலைக்கழத்தில் சர்வதேச மாணவர்களை உள்ளீர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முன்னதாக ட்ரம்ப் நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை குறித்த பல்கலைக்கழகம் ஏற்க மறுத்திருந்தது.
இதனால் பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்துவதாக அறிவித்தது.
தற்போது சர்வதேச மாணவர்களை உள்ளீர்க்கும் இயலுமையை தடுத்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது அங்கு கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும், இல்லாவிடில் அவர்களது கல்வித் தகமையை இழக்க நேரும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தினால் ஹவார்ட் பல்கலைக்கழகம் நான்கில் ஒரு பங்கு மாணவர் எண்ணிக்கையை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.








