அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம், வாகன புகைகளால் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே பல உத்திகளை செயல்படுத்தி வருகின்றது.

வாகனப் புகை முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு பொலிஸார் சிசிடிவி தரவுகளைப் பயன்படுத்துவதோடு, சிசிடிவி கமரா அமைப்பை நவீனமயமாக்கவும் இந்த நிதியம் முழு ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் டி.எம்.டி ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here