யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கோரி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆரியகுளம் பகுதியில் உள்ள, வரையறுக்கப்பட்ட யாழ். மாவட்ட தூர சேவைப் பேருந்து உரிமையாளர்களின் கம்பனி அலுவலகத்தில் நேற்று கலந்துரையால் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மகஜரை வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களும், அவர்களை பிரதிபலிக்கும் சங்கங்களும் வழங்கியுள்ளனர்.
குறிப்பாக நெடுந்தூர சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பாகவும் இதன் போது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








