எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) அறிவித்துள்ளது.
இதற்கமைய கியூஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஒரு தற்காலிக நிவாரண ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், கியூஆர் முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டவுடன் வாகன சாரதிகள் கியூஆர் முறைமையை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சிபிசி மேலும் கூறியுள்ளது.








