விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி,

மயில்கள் – 4.24 மில்லியன் 

குரங்குகள் – 1.74 மில்லியன் 

மர அணில்கள் – 2.26 மில்லியன் 

செங்குரங்குகள் – 5.17 மில்லியன் 

நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஏ.எஸ் சண்டிக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கணக்கெடுப்பிற்காக 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here