இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது பயன்பாட்டிலுள்ள பொதுப் பேரூந்துகளின் 52% மற்றும் அதிசொகுசு பேரூந்துகளின் 94% பொருளாதார ஆயுட்காலத்தைக் கடந்துள்ளன.

எனவே, புதிய பேரூந்துகளை அறிமுகப்படுத்தும் அவசியம் மிக முக்கியமாகத் தோன்றியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பயணிகளின் அதிகரித்த கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது தனியார் துறையினருக்குச் சொந்தமான 61 பேரூந்துகள் இலாபப் பகிர்வு அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், இலங்கை போக்குவரத்துச் சபை தமது சொந்த நிதியை பயன்படுத்தி 29 பேரூந்துகளை நேரடியாக கொள்வனவு செய்யும். ஏனைய பேரூந்துகள் மாதாந்த தவணைப் பழிவீட்டின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படும். இதற்கான யோசனையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்ததுடன், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here