9 பிரதி காவல்துறைமா அதிபர்கள் உட்பட 32 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 15 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளின் 2 சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், 8 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 பதில் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

இடமாற்ற முடிவுகளின்படி, தற்போது அவர்கள் பணிபுரியும் இடங்களிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் 2025 ஜூலை 02 முதல் அமுலுக்கு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்களுக்குள், பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துசார உப்புல்தெனியவின் சகோதரரான, உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என்.உபுல்தெனியவும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அவர் மெகசின் சிறைச்சாலையிலிருந்து வட்டரெக திறந்தவெளி சிறை முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here