இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று (7)அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய விசேட  சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் காவல் பிரிவுக்கு உட்பட்ட  நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30வது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

(மன்னார் நிருபர்-லம்பேர்ட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here