Saturday, June 13, 2026
No menu items!

Priya

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 24.8 சதவீதம் அதிகரித்து 1, 158 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் என்பவற்றின் முதன்மை ஏற்றுமதியின் காரணமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இரத்தினக்கற்கள், வைரங்கள், ஆபரணங்கள் மற்றும்...

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை...

குறைவடைந்த மழைவீழ்ச்சி – முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்..!

வவுனியாவில் மழைவீழ்ச்சி குறைந்தமையால் தாழ்நிலப்பகுதிகளிலிருந்து வெள்ளநீர் வடிந்தோடிவருவதுடன் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் கடந்த இருதினங்களாக மழை பெய்துவந்தது, இதனால் பல்வேறு பகுதிகளிலும் இடர்நிலமை ஏற்றப்பட்டுள்ளதுடன் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் வெள்ளம் தேங்கிய பகுதிகளிலிருந்து...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது..!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி...

அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் அரசிடம் கையளிப்பு..!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றச் செயலாளர்...

பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகை அபகரித்த குழு கைது..!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம்,நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் (29.11.2024) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இதன்போது பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி,பூசகரிடம் பறிக்கப்பட்ட நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம்...

மாவீரர் நினைவேந்தலிற்கு ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு..!

மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து  முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (29.11.2024) மாலை ஊடகங்களுக்கு கருத்து...

இன்றைய நாளுக்கான வானிலை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (30.11.2024) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (29.11.2024) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார்...

இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு..!

பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை அடுத்த நான்கு நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விநியோகப் பதிவு செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்சுலினிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img