Saturday, June 13, 2026
No menu items!

Priya

வெள்ள நிலமைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்தம் தொடர்பான பாதிப்புக்களை கண்காணித்து ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்...

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து , 5...

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்..!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (29.11.2024) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட...

கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்..!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29.11.2024) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்துவத்தை பிரதேசத்தில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து,...

முதலையால் இழுத்து செல்லப்பட்ட நபர்..!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (28.11.2024) இடம்பெற்றுள்ளது. முதலை பாறை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து எருமை மாடுகளை மறுபுறம் விரட்டிச் சென்ற நபரை, முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரிச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய...

நானாட்டான் பிரதேசத்தில் இரு வான்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினை – கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு..!

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வாழ்க்கை பெற்றான் கண்டலில் இரு குளங்களுக்கு இடையில் காணப்படும் வான் பிரச்சினை குறித்து பாதிக்கப்பட்ட பொன்தீவு கண்டல் கமக்கார அமைப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை (28.11.2024) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமது பிரச்சினையை முன் வைத்தனர். இதன் போது...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை..!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28.11.2024) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை – உபாலி பன்னிலகே தெரிவிப்பு..!

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி...

சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய மன்னாரில் கூடிய விசேட ஒருங்கிணைப்புக் குழு..!

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை (28.11.2024) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டமானது  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில்...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img