Monday, May 25, 2026
No menu items!

Tamil Vani

புதிய மதுவரி ஆணையாளர் நாயத்தை நியமிக்க அமைச்சரவை அனுமதி..!!

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மதுவரி ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை உள்நாட்டு வருவாய் சேவையின் சிறப்பு தர அதிகாரியான யு.எல். உதய குமார பெரேரா, இந்த மாதம் 10ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு அரசாங்கம் ஆதரவு – நளிந்த ஜயதிஸ்ஸ..!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (08)செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், செம்மணி மனிதப்...

முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது...

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!!

அம்பாந்தோட்டை - மித்தெனிய பொலிஸ் பிரிவின் ஜுலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனை அவதானித்த பெற்றோர் சிறுவனை உடனடியாக கட்டுவான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இந்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல...

முன்னாள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு பிணை..!!

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கான இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உட்பட நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது...

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…!!

ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 100 ரூபாவிலிருந்து 170 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் குறைவடைவதற்கான...

தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது – ரி.ராஜேந்தர்!!

செம்மணியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள...

காணாமல் போன மீனவர்கள் 4 பேர் மீட்பு..!!

இந்திய மீன்பிடி படகில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது. அதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின்...

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது ..!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

About Me

663 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img