Saturday, July 11, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு…!

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் அவர்களின் சகோதரர் வீட்டில் நேற்று (12.10) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ...

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்களுடன் சந்திப்பு…!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர்...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு தண்டம் விதிப்பு…!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர்  தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன், சுகாதார...

ஆனந்த பாலித முன்வைத்த குற்றச்சாட்டு..!

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்கத் தவறியதாக ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் நிலையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவியை ஏற்றுக்கொள்ள முன்னதாக இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் என ஆனந்த...

‘பதக்கம்’ சின்னத்தில் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சி..!

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்றாக செயற்படுவதே தங்கள் இலக்காகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவி்த்துள்ளார். திலித் ஜயவீர தலைமையில்,  'பதக்கம்' சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம்(12) மாலை வஸ்கடுவ ஹோட்டலில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு...

129 சீன பிரஜைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு…!

இணையத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 129 சீன பிரஜைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய குறித்த விசாரணைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் மற்றும் கண்டி...

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை…!

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 10,857 பேரும் சீனாவிலிருந்து 3,105 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,425 பேரும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர். அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டி…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில், 966 பேர் ஆசனங்களுக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 50 குழுக்கள் கொழும்பில் வேட்பாளர்களை...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்…!

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 37,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் நிவாரணப் பணிகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...