Friday, July 10, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

வீதியில் விழுந்து கிடந்த நபர் மீது மோதிய கார்…!

ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துத்திரிபிட்டிகம பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகவெல பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது,  வீதியில் விழுந்து கிடந்த நபர் காயமடைந்துள்ள நிலையில் ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை…!

7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போதே அவர் இதனைக் குறிப்பிட்டனார். 2015 சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தினேஷ் ஷாப்டர் மரணம் உள்ளிட்ட 7 வழக்குகளுக்கான...

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 76,218 பேர் பாதிப்பு…!

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த நிலைமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக...

சீரற்ற வானிலையினால் 3196 பேர் பாதிப்பு…!

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் முந்தல் மகாகும்புக்கடவல நாத்தாண்டி தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!

கல்கிஸ்ஸ - ஒடியன் சந்தி பகுதியில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான...

பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பிலான அறிவிப்பு…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13.10) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும். எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித்...

26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு ரணில் பயணம்…!

கடும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கைத்தீவு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக்காலமான 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு...

இன்றைய நாளுக்கான வானிலை…!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம்...

மட்டுப்படுத்தப்பட்ட புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் ரயில்…!

புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் ரயில் லுணுவில வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லுணுவில பகுதிக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய பட்டியல் பிரச்சினையால் கட்சிகளுக்குள் பிளவு?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதனால், கட்சிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பட்டியல்களுக்கு கட்சித் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிலரைக் கடுமையாக விமர்சிப்பதாலேயே, இந்த மோதல்கள் அதிகரிக்க காரணம் எனவும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. தேசிய...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...