Wednesday, July 8, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மன்னாரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்த பின்தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள்…

மன்னார் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணப்படுகின்றது. குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மாத்திரம் காணப்பட்டது.இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை தெரிவு செய்ய மாணவர்கள் அயல் பாடசாலைகளான நானாட்டான் மற்றும் முருங்கன் பாடசாலைகளுக்கு பஸ்ஸிலும்,துவிச்சக்கர வண்டியிலும்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணி…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள் சங்கானை நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. மேற்பார்வையாளர் திரு.ரஜீவனின் மேற்பார்வையின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவால் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் கொழும்பு 07 இல் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (04.10) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அப்துல்லாஹ் மஹ்ரூப் அகில இலங்கை மக்கள்...

மகிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட 1690 துப்பாக்கிகள்…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ச, 'எவன்ட்கார்ட்' உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு 8 துப்பாக்கிகளும், நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு...

வேட்பு மனுத் தாக்கல் செய்த 5 பேர்…

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 05 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 2 பேரும் சுயேட்சை குழுவாக  3 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 38 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 20 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்து பதிவாகும்...

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்  வேளையில்  பட்டாசு கொளுத்த தடை…

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தினங்களில் வீதிகளில் பட்டாசுகளை கொளுத்தி மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (04.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பொதுத் தேர்தலுக்கான...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின்  உதவியாளர்கள் இருவர் கைது…!

பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான"படோவிட்ட அசங்க"வின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும், 67 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  06...

கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேட்சை குழுக்கள்…

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத்  தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தது. அதன்படி, பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 12 வேட்பாளர்களும், கம்பஹா...

அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்…!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04.10) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர்கள் சிலர் இணைந்து...
- Advertisement -

Latest News

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்...