Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

அநுராதபுரம், மரதன்கடவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (26.08) கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 33...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திகொல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, யக்கல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் ...

சஜித் நிச்சயமாக தேர்தலில் வெற்றிபெறுவார்; டளஸ் அழகப்பெரும..!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவே வெற்றி பெறும் வேட்பாளராக இருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் எப்படி வெற்றி பெறுவார் என கணித ரீதியாக ஆய்வு நடத்தி விளக்கமளித்துள்ள டளஸ் அழகப்பெரும, ”இம்முறை...

நுவரெலியாவில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைத்து திருட்டு முயற்சி..!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (26.08) இரவு உடைக்கப்பட்டுள்ளது. எனினும் (27.08) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அமைந்துள்ள பின்புற அறையினுள் காணப்பட்ட இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு உள்...

சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு..!

திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை புதன்கிழமை (28.08) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தலாவ, நாச்சாதுவ மற்றும் விஜயபுர ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக 1,052 முறைப்பாடுகள்..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, 52 புகார்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 18 குற்ற வழக்குகள் தொடர்பானவை. இந்த புகார்கள் தொடர்பாக, ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்களும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் அதிகரித்து வருவதால்,...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை மொத்தம் 925 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 1,000 முறைப்பாடுகள் பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியது. இதேவேளை,...

யாழில் கணவனால் தீயிட்டு எரியூட்டப்பட்ட மனைவி..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு கோரல்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டெம்பர் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (26.08) முதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட உயர்தர மாணவி..!

மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை, வெதிகும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில் சம்பவ தினமான 24...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...