Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் விபத்து..!

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் மகிழுந்து ஒன்று கடந்த 09/07/2024 அன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கொல்லவிளாங்குளம் - வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சின்னத்துரை வஸ்கரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தார். மகிழுந்தின் டயர் வெடித்ததால், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு மகிழுந்து விலகியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை மகிழுந்தில் பயணித்த மேலும் இருவர்...

இந்திய இழுவை மடியின் பாதிப்பால் தாலியை கூட மீள முடியவில்லை – மீனவ சங்கப் பெண் தெரிவிப்பு..!

மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடித் தொழிலாளர்களினால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார். மாதகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின்...

வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை  கிளிநொச்சியில் ..!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை 12/07/204 நேற்று  கிளிநொச்சியில் ஆரம்பமானது. கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் குறித்த நடமாடும் சேவை நேற்று ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடையவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் திணைக்கள செயலாளர், உதவி செயலாளர்கள், மாவட்ட...

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம்...

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஊடக செயலாளர் நெல்சனிற்கு எதிராக முறைப்பாடு…!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவிற்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை மகேன் ரட்ட அமைப்பின் தலைவர் சஞ்ய மஹாவத்த பதிவு செய்துள்ளார். கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதத்தில் நெல்சனின் வங்கிக் கணக்கில் பாரியளவு தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருந்தொகை...

யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது..!

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. பலாலி வீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி...

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே. – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நேற்று (12) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள், மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக,...

அநுராதபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் கொலை…!

அநுராதபுரத்தில் கல்னெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்னெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அநுராதபுரம் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரது சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,சந்தேக...

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வு…!

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் சிவநாதன் தலைமையில் இடம் பெற்றது. பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பான நிகழ்வில் முருகப்பெருமான் புகழ்பாடும் பண்ணிசைக் கச்சேரி இடம் பெற்றது இதில் அருள் விக்னேஸ்வரன்  அவர்கள் பாடல் ...

கதிர்காம உற்சவத்தில் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல்…!

கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர். கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள், முச்சக்கரவண்டிகளின் பெட்டரி உட்பட உதிரிப்பாகங்கள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள்...
- Advertisement -

Latest News

வாகன இறக்குமதி கொள்கைகளை இலகுப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை வாகனத் துறையின் சீரான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் நன்மை பயக்க தேவையான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்...