Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பிரதமர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையத்தை திறந்து வைத்த ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் மூன்று இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபாரத் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார். அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் அவர்கள் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்...

இரத்தினபுரியில் அயல்வீட்டாரால் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

இரத்தினபுரியில் பொத்துப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புக்க பகுதியில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் ரம்புக்க பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில் வசிக்கும் நபர்...

யாழ் பஸ்ஸில் வாள் வெட்டு; சாரதி மற்றும் பயணி ஒருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸில் ஏறிய இரு இளைஞர்கள் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்ட நிலையில் சாரதியும் , பஸ்ஸில் பயணித்த...

ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவு; நிமல் லான்சா எதிர்ப்பு…!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவுகளுக்கு நிமல் லான்சா மற்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்த அனைத்து தரப்புக்களையும் ஜனாதிபதி தற்போதும் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில்...

மட்டக்களப்பில்  யுத்தி நடவடிக்கை கசிப்புடன் பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது..!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின்  விசேட யுக்திய  நடவடிக்கையில் கஞ்சா, சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற பிடியாணை உட்பட 7 பேரை நேற்று (12) கைது செய்துள்ளதுடன் 5 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு 20 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபரின் 2ம் கட்ட யுக்தியில் சட்டவிரோத...

சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதாள உலகக்குழுத்தலைவர் விடுத்துள்ள அச்சுறுத்தல்…!

கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பூஸா சிறைச்சாலை சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக குறித்த அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றவாளிகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸ் விசேட...

யாழ்ப்பாணத்தில் 87 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது காருக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம்...

பிரதமர் தினேஷ் குணவர்தன வட மாகாணத்திற்கு விஜயம்..!

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர நியமனமங்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார். வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிலே தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த 175 பேருக்கான நியமனங்களை நேற்றைய தினம் பிரதமர் யாழ்ப்பாண பொது நூலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன்...

சீன அரசாங்கத்தின் பொருத்து வீட்டுத்திட்டம்..!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின்  வீடுகள் அமைப்பதற்காக எட்டு பாரஊர்திகளில் பொருத்து வீடுகள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த பொருத்து வீடுகளைக்கொண்ட பாரஊர்தியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பார்வையிட்டார். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64வீடுகள் இவ்வாறு  வழங்கப்படவுள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  அருச்சுனா இராமநாதன் கருத்து..!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாகவும் , அதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் துணை போவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு நான் வர கூடாது...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...