Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது…!

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண்டாரவளை, ஹப்புத்தளை,...

இலங்கையில் உருவாகும் திடீர் பணக்காரர்கள்…!

இலங்கையில் பலர் திடீர் பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறித்த நபர்கள் திடீர் பணக்காரர்களாக மாறுவதற்கு எந்த காரணமும் இல்லை என முறைப்பாடுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கிடைக்கப்பெறும் ஒவ்வொரு முறைப்பாடு...

மற்றொரு மீனவரும் பலி..!

கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த மூன்று மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தங்காலையில் இருந்து 320 கடல்மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த மீனவ படகு கரையை நோக்கி பயணிப்பதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய...

1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு…!

பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைப்பற்றப்பட்ட 1,208 கிலோகிராம் போதைப்பொருட்கள் அவை தொடர்பான, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, புத்தளம் -வண்ணாத்தவில்லு, லாக்டோஸ் தோட்டத்தில் உள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு, தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ்...

கடற்படை வீரர் மரணித்ததற்க்கு அஞ்சலி! நா.வர்ணகுல சிங்கம்.!

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது எதுவும் சொல்லாதவர்கள் தற்செயலாக கடற்படை வீரர் மரணித்ததற்க்கு அஞ்சலி செலுத்துவதற்க்கு சென்றுள்ளனர். தமிழ் மக்கள்  கொல்லப்பட்ட போது  எதுவும் சொல்லாதவர்கள். தற்செயலாக கடற் படை வீரர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்க சென்றுள்ளார்கள் என்று வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்  சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுல சிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று...

கதிர்காமம் காட்டுவழிப் பாத யாத்திரையினை ஆரம்பித்தனர் பக்தர்கள்…!

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றம் நடைபெறவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை  வழியாக மக்கள் இன்று (30.06) பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளனர். பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வன பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று  நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை...

மஹரகம பொதுச்சந்தையில் கத்திக்குத்து…!

மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சந்தேக நபரினை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என்பதோடு குறித்த நபரிடம் இருந்து போதை...

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு..!

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு நேற்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்தார். அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த நோய் தொடர்பில் கூறக்கடமைப்பட்டுள்ளேன். நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை...

கிளிநொச்சி  குளத்தில் நீராட சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவரை காணவில்லை ..!

கிளிநொச்சி வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த 04 சிறுவர்கள் நேற்றைய தினம் 29.06.2024 கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீராட சென்ற சமயம் அதில் ஒரு சிறுவனை காணவில்லை. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது திருமுருகண்டி  வசந்த நகர்  14 செல்வரத்தினர் துசாந்தன் என்ற  சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார். மேலும்   பொதுமக்கள்  பொலிஸார் மற்றும் பொது...

மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தவர் கைது…!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வந்த நபரினை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்   கேரளா கஞ்சா விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய பொலிஸார்   சந்தேகநபரை  கைது  செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன்...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...