Thursday, July 9, 2026
No menu items!

News Line

சீனாவை உலுக்கிய பூகம்பம்

சீனாவில் நேற்று இரவு 6.2-ரிக்ட்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200 இற்க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வீடுகள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதால்  மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளிற்கு ஒடி அங்கே தஞ்சமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிதி உதவியை தடை செய்த  ஹங்கேரி

உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்று நேற்று முன்தினம்(16) உதவிப் பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த உதவிப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை...

பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கடந்த வியாழக்கிழமை ஒப்டஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று தினம் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா முதலில்...

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

யாழ்ப்பாணம்-நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா  இன்றைய தினம் (18) திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி  வியாழக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

இலங்கைக்கு பெருமை சேர்த்த கில்மிஷா

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டி நேற்றைய தினம் (17.12.2023) சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 6 போட்டியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி. கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார். குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய...

கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட குடும்பஸ்தர்  உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருபவர்  நேற்று முன்தினம்(16) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவர் கார்த்திகை கிழங்கை உட்கொண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48)  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார். அதனை அடுத்து,...

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் நேற்று(14) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் வரவு செலவு திட்ட உரையொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பள அதிகரிப்பை கோரி வேலைநிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள்  என தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , பத்தாயிரம் ரூபாவுக்காக கருவில்...

 வேலைவாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக  நான்கு ஆண்டுகளில்  07 இலட்சத்து 32 ஆயிரம் மக்கள் இலங்கையிலிருந்து சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன. இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்ட பின்னரே சட்ட ரீதியாக மேற்படி 07 இலட்சத்து 32 ஆயிரம் பேரும் வெளிநாடு சென்றுள்ளனர். இலங்கையர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும்...

ஹமாஸில் கொல்லப்பட்ட 10 இஸ்ரேலிய படையினர்!

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் 02 இராணுவ தளபதிகள் உட்பட  10 இராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் செஜய்யாவில் உள்ள கட்டிடமொன்றின் மீது  ஹமாஸ் மேற்கொண்ட தாகுதலின் போது , அங்கு இருந்த படையினரை காப்பாற்ற முயன்ற போதே இந்த படையினர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர். காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...