Monday, July 13, 2026
No menu items!

News Line

சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி..!

கனடாவில்  இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம்(02) பதிவாகியுள்ளது. குறித்த பெண் சிகிரியாவில் சூரிய உதயத்தை காண்பதற்கு  சென்ற வேளை அவரை யானை தாக்கியுள்ளது. அதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச...

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிக்கை! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். இந் நிலையில் இன்று (2) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால்  குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலலே குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார...

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர்..!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்வியைத் தழுவும் மும்பை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய...

ஷெங்கன் வலயத்தில்  இணைந்துள்ள 2நாடுகள்..!

ஐரோப்பாவின் ஷெங்கன் விசா வலயத்தில் ருமேனியாவும் பல்கேரியாவும் நேற்று முன்தினம் (31) பகுதியளவில்  இணைந்துள்ளன. இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கும் ஏனைய ஷெங்கன் வலய நாடுகளுக்கு இடையில்  கடல் மற்றும் வான் வழியாக விசா  சோதனைகளின்றி பயணம்செய்ய முடியும். ருமேனியாவும் பல்கேரியாவும் 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன. எனினும், விசா கட்டுப்பாடுகள் அற்ற ஷெங்கன் வலயத்தில்    இணைவதற்கு இந்நாடுகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நாடுகளின் ஷெங்கன் விண்ணப்பத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 2011 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. எனினும் அதே வருடம் ஐரோப்பிய அமைச்சர்   அவையில் அது தோற்கடிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் ருமேனியாவும் பல்கேரியாவும்...

ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்..!

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் கல்வி கற்கும்  மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த  நபர் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து  கொண்டிருந்தபோது நாவலப்பிட்டி-கண்டி  ரயிலில்  மோதியதாக கூறப்படுகிறது. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து...

காலி முகத்திடலில் பெண்ணின் விபரீத செயல்..!

காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார். இக் குறித்த சம்பவம் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது  இப் பெண் கடலில் குதித்துள்ளார். மேலும் பொலிஸ் ஆய்வாளர் A.H.P.S. அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக...

சித்திரை புத்தாண்டுக்கு முன் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு..!

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி சபை கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை  மாவட்டங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ்...

ஏப்ரல் 21 தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது – மைத்ரி

தமக்கு பாதுகாப்பு தொடர்பில், எந்தவித  பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது போதியளவான பாதுகாப்பு தமக்கு கிடைக்கப்பெறுவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்,  அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...