ஜோர்தானில் அமைந்துள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அங்குள்ள எரிபொருள் கிடங்கு மற்றும் பல வெடிமருந்து கிடங்குகளில் தீப்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஈரானின் கடற்கரை இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையிலான முதல் கட்ட நடவடிக்கை இதுவாகும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்  இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களினால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போரை முடிவுக்கு கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டு கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தம் குறித்து மேலும் சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here