காலி முகத்திடல் பகுதியில் 3000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 37 வயதான சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






