Saturday, July 11, 2026
No menu items!

News Line

அஸ்வெசும தொடர்பில் விசேட வேலைத்திட்டம்..!

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன்...

தரவரிசையில் முன்னேறிய நிஸ்ஸங்க..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். கடந்த வாரம் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பத்தும் நிஸ்ஸங்க மூன்று போட்டிளில் மொத்த 151 ஓட்டங்களை பெற்ற நிலையில் புதிய தரவரிசையில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேநேரம் சரித் அசலங்க 146...

வீதியை விட்டு தடம் புரண்ட பேரூந்து..!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்தொன்று சற்று முன்னர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார்...

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு...

வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்ய முயன்ற  பூசகர் ஒருவரை நேற்றைய தினம் (19) பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய...

வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி விதித்த தடை..!  

பங்களாதேஷ்க்கு எதிராக இலங்கை விளையாடவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாதவாறு சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு ஐசிசி  தடை  விதித்துள்ளது. ஐசிசி ஒழுக்கக் கோவைக்கான 2ஆம் நிலை மீறல்களில் வனிந்து ஹசரங்க ஈடுபட்டதால் அவருக்கான தகுதி நீக்கப் புள்ளிகள் 24 மாத காலப்பகுதியில் 8ஆக உயர்ந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையில் கடந்த மாதம் நடைபெற்ற...

போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்ப இஸ்ரேல் சதி..!

காசா பிராந்தியத்தின் மிகப் பெரிய வைத்தியசாலையை இஸ்ரேல் முற்றுகையிட்டதையடுத்து, காஸா போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை குழப்புவற்கு இஸ்ரேல் சதி செய்கிறது என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே குற்றம் சுமத்தியுள்ளார். ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களை தான் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை காஸாவின் அல் ஷிபா வைத்தியசாலை முற்றுகையின்போது, ஹமாஸின் டசின் கணக்கான...

பெற்றோர்களை நெகிழ வைத்த இளம் தாய்..!

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாய் மரதன் ஓட்டப்போட்டியில் நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடியுள்ளார். இச்செயல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளதுடன், அனைத்து  பெற்றோருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்மை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து தப்பிச் செல்லும் நபர்கள் – சிக்கலில் குடிவரவு அதிகாரிகள்

நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக 5 பாதாள உலக குழு தலைவர்களுக்கு விமான கடவுச்சீட்டு எவ்வாறு வழங்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இரண்டு பிரதி கட்டுப்பாட்டாளர்கள் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை தயாரித்துள்ளனர். பாதாள உலக குழு தலைவர்களான மத்துகம ஷான் மற்றும் ஹீனட்டியன மகேஷ் ஆகியோருக்கு கடவுச்சீட்டு...

ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக முறைப்பாடு..!

கோப் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய ரோஹிதவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊழல்,மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுdan இந்த முறைப்பாடு சட்டவிரோத நிதிச் சொத்துக்கள் பிரிவிடம் அதிகாரகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவான...
- Advertisement -

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...