Friday, July 10, 2026
No menu items!

News Line

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர்

அநுராதபுரம் - நொச்சியாகம பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய காதலனும் 51 வயதுடைய முதியவருமாவர். பாதிக்கப்பட்ட சிறுமி  தனது பாட்டி சுகயீனமடைந்ததன் காரணமாக அவரது  வீட்டுக்கு தங்குவதற்காக சென்றிருந்த நிலையில் 32 வயது இளைஞருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார். இந்த காதல் தொடர்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின்...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் காலமானார்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படது. அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி...

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல் காலக்கெடு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு...

இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல..!

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து (Immune Globulin) தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திககதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய...

இன்றைய வானிலை முக்கிய அறிவிப்புகள்

நாடு முழுவதும் இன்றைய தினம் (07) மழையற்ற சீரான  வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,...

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...

சிலியில் பாரிய காட்டுத் தீ

சிலி நாட்டில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயினால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கும்  ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார். மேலும் திங்கட்கிழமை 10 பேர்  தீயில் சிக்கி உயிரிழந்தனர். அத்தோடு, உயிழப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக என சிலியின் தடயவியல் மருத்துவ சேவையின்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  மொத்த மற்றும் சில்லறை விலைகள்  திருத்தப்பட்டுள்ளன. வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்தலி 900 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320...

7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று திங்கட்கிழமை (05) இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு  கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிஸார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப்...

அஜித் தோவலுடன் சந்திப்பை மேற்கொண்ட அனுரகுமார திசாநாயக்க 

இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழு நேற்று(05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன்  டெல்லியில் உள்ள சர்தார் படேல் பவனில் நேற்று  பிற்பகல் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதகாவும் இக் கலந்துரையாடலில் தேசிய மக்கள்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...