Friday, July 17, 2026
No menu items!

News

கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் போதைப்பொருள்...

சலூனில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பாடசாலை மாணவி..!

அநுராதபுரத்தில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முடிதிருத்தும் நிலையத்தின் உரிமையாளரையும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது  செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி,  பாதிக்கப்பட்ட சிறுமியிடம்...

சபாநாயகருக்கு எதிரான விவாதம் ஆரம்பம்..!  

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று(19)  ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி சபாநாயகருக்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி...

வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதி சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்க்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளைய தினம்(20) வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில்...

ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு..!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது  தெரிவித்துள்ளார். தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் முடித்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறும்  இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்த இளைஞன்..!

தென்னிலங்கை பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி ஐந்து கோடி ரூபாயை இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். கொரியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த இளைஞன் நாடு திரும்பி வீடியோ கேம்களுக்கு அடிமையாக மாறியதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த விளையாட்டில் ஐந்து கோடியை இழந்து மனம் உடைந்ததாகவும் அதனால் தூக்கிட்டு...

செம்பியனானது இஸ்லாமாபாத்..!

நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடட் (Islamabad United) அணி கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடட் (Islamabad United) மற்றும் முல்தான் சுல்தான்ஸ் (Multan Sultans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இஸ்லாமாபாத் அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முல்தான்...

இன்று முதல் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை..!

பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை இன்று (18) முதல் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 41 பரீட்சை நிலையங்களில் இந்த செயன்முறை பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையில் பரீட்சைக்கு தோற்றும் திகதி...

உலக கவனத்தை ஈர்த்த அவுஸ்திரேலிய திருமணம்..!

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தனது நீண்டகால தோழியான சோபி அல்லோச்சசுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாக நேற்றைய தினம்(17) தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டதத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்களின் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில்...

சீதுவையில் பெண்ணொருவர் கொலை – இளைஞன் கைது..!

சீதுவை, முத்துவாடிய பிரதேசத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த ஆண்ணொருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய பலாங்கொடை...
- Advertisement -

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...