மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த (15) ஆம் திகதி குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள்  கடமை நிமித்தம் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த குறித்த பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளை கண்ட அவர், அவரது மடியில் அமர முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸ் அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான பொலிஸ் கொன்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு தொல்லை கொடுக்க முயற்சித்தமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிளின் பணியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here