ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) ஜோர்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை தாக்கியுள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோர்தானின் அஸ்ராக் இராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தொடர்பு சாதனங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் ஆகியன குறிவைத்து தாக்கப்பட்டன என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேநேரம், தங்கள் நாட்டை குறிவைத்து ஏவப்பட்ட 3 ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க படைகளும் இஸ்ரேல் ஆதரவு போராளிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவைத்தின் பல பகுதிகளில் ஏவுகணை தளங்களையும் ஏவுகணைகளையும் அழித்ததாக ஈரான் கூறியுள்ளது.
இதேவேளை ‘பதிலுக்கு பதில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என ஈரானின் புரட்சிகர காவல் படை IRGC அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.








