Friday, November 6, 2026
No menu items!

Parliment Election2024

வெள்ளவத்தை பகுதியில் தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றன!

நாட்டில் 10ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று அமைதியான முறையில் வாக்களித்தனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த இளங்குமரன்…

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு இளங்குமரன் அவர்கள் இன்றையதினம், தனது வாக்கினை யாழ்ப்பாணம் உசன் ராமநாதன் மகா வித்தியாலயத்தில் அளித்தார். வாக்களித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த கால தேர்தல்களை விட ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நடைபெறுகின்ற தேர்தலில் ஒரு பாரிய மாற்றம் காணப்படுகிறது. அதுதான் இந்த நாட்டில்...

பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த அனுஷா சந்திரசேகரன் !

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன், பெருந்தோட்ட மக்கள் உண்மையிலேயே மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், இந்த தேர்தலில்...

தனது வாக்கினை செலுத்திய சசிகலா ரவிராஜ்…

அனைத்து மக்களையும் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் அழைத்துச் செல்பவர்களை மக்கள் இந்தத் தேர்தல் ஊடாக தெரிவு செய்வார்கள் என பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் திருமதி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (14.11.2024) காலை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெறும் வாக்களிப்பு நடவடிக்கை!

இலங்கையின் 10 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது. பாராளுமன்றத்...

வெளியாகிய தேர்தல் வாக்களிப்பு வீதம்!

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 10 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 20% கண்டி 25 % நுவரெலியா 20 % பதுளை 21 % திகாமடுல்ல 18 % மட்டக்களப்பு 15 % கேகாலை 20 % புத்தளம் 22 % மாத்தறை 10 % களுத்துறை 20 % திருகோணமலை 23 % குருநாகல் 22 % பொலன்னறுவை 22 % யாழ்ப்பாணம் 16 %

தபால் மூல வாக்களிப்பு எண்ணும் பணி மாலை 5.00 மணிக்கு ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மாலை 4.00 மணியுடன் வாக்களிக்கும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அத்துடன் கட்சிகள்...

காலை 09.00 மணி வரை வாக்களிப்பு சதவீதம்…!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 04.00 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு -20% களுத்துறை -15% நுவரெலியா -07% யாழ்ப்பாணம் -05% திருகோணமலை -10% கிளிநொச்சி -06%

கிளிநொச்சியில் வாக்களிப்பு ஆரம்பம்; மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…!

இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14.11.2024) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு சுமூகமான...
- Advertisement -

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...