GSP+ மதிப்பாய்வு நேர்மறையாக பரிசீலிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவு பிரதானி சார்லஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வைட்லி இவ்வாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு பல வணிக சாதனைகளை அடைய உதவியுள்ளது என்றும், மேலும் வணிக சாதனைகளை அடைவதில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையை வழங்குவதில் கருத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் வைட்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here