அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அந்த நிறுவன அதிகாரிகள் உட்பட அவர்களுக்கு உதவிய அமைச்சர்களிடம் கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழு இனிவரும் காலங்களில் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமே கேள்வி எழுப்புவதற்கு எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here