நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.
சென்னை அணி சார்பாக சிவம் துபே (Shivam Dube) 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் ரசித் கான் (Rashid Khan) 3 விக்கட்டுக்களையும், சாய் கிசோர் (Sai Kisore), ஸ்பென்சர் ஜோன்சன் (Spencer Johnson) மற்றும் மோஹிட் சர்மா (Mohit Sharma) ஆகியோர் தலா 1 விக்கட்டையும் குஜராத் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
குஜராத் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சாய் சுதர்சன் (Sai Sudharsan) 37 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
சென்னை அணிக்கு துசார் தேஸ்பாண்டே (Tushar Deshpande), தீபக் சஹர் (Deepak Chahar) மற்றும் முஸ்தஃபிஸுர் ரஹ்மான் (Mustafizur Rahman) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை வீரர் சிவம் துபே (Shivam Dube) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது நிலையில் உள்ளது.