இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அபிஷேக் சர்மா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 163 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here