January 13, 2026
LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்..!
Sports Updates புதிய செய்திகள்

LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்..!

May 22, 2024

2024ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நேற்று கொழும்பில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது

இந்த ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 120,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இதன்படி LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக மதீஷ பத்திரன பதிவாகியுள்ளார்.

இவரை ஏலத்தில் வாங்குவதற்கு தம்புள்ளை மற்றும் காலி அணிகள் முன்வந்த போதிலும் கொழும்பு அணி இவரை ஏலத்தில் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தில்ஷான் மதுஷங்க 92,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *