மோட்டார் வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்..!!
நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்களால் மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று (17) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப்
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் இலங்கையில்..!!
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம்(19) சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு
ஒரே வாரத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது!!
நாடு முழுவதும் கடந்த வாரம் நடத்திய சோதனைகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பை அடையாளம் கண்டு அடக்கவும், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யவும் நாடு முழுவதும் பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஜூலை 7 முதல்
மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி ஆள்மாறாட்டம்..!!!
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஒருவர் ஆள்மாறாட்டம் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்டவர் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நேற்று (17) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மற்றும் இம்மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட
தொடருந்து மோதி காட்டு யானையொன்று பலி!!
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டள்ளது. அப்பகுதி மக்களின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணி முதல் யானை கிராமத்தில் சுற்றித் திரிந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைந்து வருவதாகவும் அறியப்படுகிறது. யானை வந்தபோது வனஜீவராசிகள் பாதுகாப்பு
தேயிலை தயாரிப்புக்கு ரூ.3 அனுமதிக் கட்டணம் – நிதி குழுவின் அங்கீகாரம்!
1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான புதிய ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த ஒழுங்குவிதம், 2024 ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் தலைமையிலான கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு ரூ.3 அனுமதிக்
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவைக்கு விசேட சலுகைகள் அறிவிப்பு!
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்காக விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அவை குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், சிவகங்கை கப்பல்
பொலன்னறுவையில் புதிதாக தபாலகம் திறந்து வைப்பு..!!
இலங்கை அஞ்சல் சேவை நாட்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் முக்கிய ஊடகமாக மாற்றப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நோக்கின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை புதிய பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று (17) அமைச்சர் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, முத்திரை கௌண்டர் திறப்பு மற்றும் முதல் பரிவர்த்தனையும் இடம்பெற்றது.
அமெரிக்கா வரி விதிப்பு: இலங்கை தேங்காய் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவு!
2025 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தெங்கு கைத்தொழில் மூலம் ஆண்டுக்கு 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை தற்போது பெற்றுக்கொள்கிறது. தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான