தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம்  முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சத்தனமான முறையில் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here