Saturday, May 9, 2026
No menu items!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சரியான தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்; ராஜித சேனாரத்ன…!

இலங்கையில் இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், "ஒருநாள் ஒரு வீட்டில்...

ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு ரணிலுக்கு உள்ளது; மாவைசேனாதி ராஜா…!

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்...

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியாவில் பிரச்சாரம்…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சாரநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா தினச்சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேவேளை, குறித்த நடவடிக்கை நாடளாவிய...

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம்சாட்டிய சுமந்திரன்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த எனது மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணையை தடுத்து நிறுத்தி, தான் ஒரு மோசமான இனவாதி என்பதை நிரூபித்துள்ளார். இது தமிழ் மக்களைப் பழிவாங்கும் செயற்பாடேயாகும்’’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று...

ராமண்ணா பிரிவின் மகாநாயக்கரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27.08) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்னா பிரிவினருக்கு விஜயம் செய்து அங்கு ராமண்ணா பிரிவின் மகாநாயக்கர் அக்கமஹா பண்டித அதிபதிகளை சந்தித்துள்ளார். மகாநாயக்கர் தலைமையிலான ராமண்ணா பிரிவின் மகா சங்கத்தினருடன் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு...

சட்டமாக்கப்பட்ட கொள்கைகளை யாராலும் மாற்ற முடியாது; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதார மீட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன்  உடன்படிக்கையை கடைப்பிடிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார். இதபோது "நான் கிரீஸைப் போல இருக்க விரும்பவில்லை, அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர், பின் தேர்தல் நடத்தினர், பின் வாக்கெடுப்பு நடத்தினர், அங்கு 60% ஒப்பந்தத்தை நிராகரித்தனர், பின் பொருளாதாரம்...

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  விமலவீர திஸாநாயக்க உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இணைந்துகொண்டுள்ளார். நேற்று (26.08) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு ப்ளெவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டின்...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசும் ரணில்; சுஜீவ சேனசிங்க…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பல கோடிகளை செலவு செய்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் சேர்ப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால்...

அபிவிருத்தி திட்டங்களை கட்டியெழுப்பவுள்ள ஜனாதிபதி..!

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை கண்காணித்து வரும் அமெரிக்கா…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர்...
- Advertisement -spot_img

Latest News

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார்...
- Advertisement -spot_img