ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பல கோடிகளை செலவு செய்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் சேர்ப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதியாக தெரிவாக முடியாதென்று அவருக்குத் தெரிந்துள்ளதால் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுப்பது அவரது நோக்கமாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்பது ரணிலின் கணிப்பு. அதனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என ரணில் உத்தேசித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.








