Sunday, May 3, 2026
No menu items!

டக்ளஸ் தேவானந்தா

தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020...

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பி.டி.பியின் கொள்கை; டக்ளஸ் தெரிவிப்பு…

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பி.டி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம் விரும்பவதும் கிடையாது. எமது நிலைப்பாட்டின் பெறுபெறே எமக்கு முக்கியம். அதனால் நாம் இவ்வாறானவர்களின்...

கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்…

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி, பெரியகுளம்  கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது. இதன்போது அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வசா விழா பாதையினை திறப்பதற்கு நீண்ட காலமாக முயற்சிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அப்பாதையினை திறப்பதற்கு பல்வேறு வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் அத்துடன் தற்போதைய ஜனாதிபதி...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் திறந்து வைப்பு…!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றைய தினம் 17.10.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதன் போது கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அந்த அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியின் வசம் செல்ல மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான...

வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுத் தேர்தலில் வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்முறை வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்புமனுக்களை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் த.புஸ்பராசா தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனுக்கள் தயாரிக்கும்...

மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த...

தனது வாக்கைப் பதிவு செய்த டக்ளஸ் தேவானந்தா….!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் நாடுமுழுவதும் இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்...

யாழில் மாபெரும் பிரசார கூட்டம்…!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் இன்றைய தினம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் அனைத்து...

தற்போதைய சூழ்நிலையில் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிப்பது அவசியம்; டக்ளஸ் தேவானந்தா!

நாட்டினதும் தத்தமது எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவார்களாயின் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் சிறப்பான பொருளாதாரத்துடன் கூடிய வாழ்கை கட்டமைப்பு உருவாக்கிக்கொள்ள முடியும் என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (12.09.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img