இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை அரியநேந்திரனுக்கு ஆதரவு!
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது. நேற்றைய தினம் 15.09.2024 இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான
சாவகச்சேரியில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பரப்புரை!
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் சாவகச்சேரி நகர் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வீதியால் சென்ற பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிவோருக்கு தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்கள்
அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும்; நல்லதம்பி சிறிக்காந்தா…!
தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான நல்லதம்பி சிறிக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின்
தமிழன் தமிழனாக இருக்க வேண்டும்; பா.அரியநேத்திரன்!
சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளதாகவும், இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் இன்று புதன்கிழமை(4) மதியம் இடம்பெற்ற
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரில்!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். நேற்றைய தினம் மதியம்
தமிழ் பொது வேட்பாளர் செலுத்திய அஞ்சலி..!
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக இன்று (27.08) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின்
50 வீதமான வாக்கு பெறுவாரா? அரியநேந்திரன்..!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் EPRLF கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்
அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கும் சிறீதரன்….!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக்
அறிவிக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் சின்னம்..!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள ப.அரியநேத்திரனுக்கான தேர்தல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற “சின்னம் சங்கு” என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சையாக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்..!
தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமது பொது வேட்பாளர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாக