Saturday, June 27, 2026
No menu items!

விபத்து

கதிர்காம யாத்திரை முடித்து திரும்பிய பேருந்து விபத்தில் 3 பேர் காயம் – காத்தான்குடியில் சம்பவம்!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றது. இவ் விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில்...

அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்: ஒருகொடவத்தில் கொள்கலன் கவிழ்ந்த விபத்து!

கொழும்பு - ஒருகொடவத்தை பிரதேசத்தில் கொள்கலன் வண்டி ஒன்று குடைசாய்ந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து பயணித்த கொள்கலன் வண்டி ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி  மீது குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து; மூவர் படுகாயம்!

வவுனியா - மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தானது நேற்று மாலை வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது இந்த விபத்தில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து விபத்து; 15 பேர் காயம் – 10 வாகனங்கள் சேதம்!

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 10 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொனராகலைலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒருகொடவத்தையில் சாலையோரம் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மீது பின்புறமாக...

இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் பலி!

அனுராதபுரம், மதவாச்சியில் இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மதவாச்சி, ரம்பேவ, ரத்மல்கஹவெவ வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மற்றுமொரு உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணை தூதரக உயர் அதிகாரி உயிரிழப்பு..!

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை (26.05.2025) அதிகாலை 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம்...

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – 23 பேர் காயம்..!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு (11:15 ) மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும்...

சாலை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

கனமழை பெய்யும் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மழைக்காலங்களில் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லுமாறு சாலை மேம்பாட்டு ஆணையத்தின் அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல்...

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கெப் வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் - ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் நிகழ்ந்தது. விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில்...

இந்த ஆண்டு சாலை விபத்துகளில் 965 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை தீவு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் இந்த மக்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தக் காலகட்டத்தில், 902 உயிரிழப்புகள் ஏற்பட்ட போக்குவரத்து விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டு 1,842 கடுமையான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்,...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img